மாவட்ட செய்திகள்
மாசிமகம் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி உற்சவம்.
மாசி மகத்தை முன்னிட்டு ஸ்ரீஆதிகேசவபெருமாள், ஸ்ரீபாஷ்யகார சுவாமி மற்றும் சக்கரத்தாழ்வார்க்கு சிறப்பு திருமஞ்சனமும் சக்கரத்தாழ்வார் மற்றும் முதலியாண்டான் ஆகியோர்களுக்கு தீர்த்தவாரி உற்சவமும் வெகுவிமர்சியாக நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பழமைவாய்ந்த ஸ்ரீஆதிகேசவபெருமாள் பாஷ்யகார சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயில் ராமாநுஜர் தானுகந்த திருமேனியாக பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். இந்தநிலையில், ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீஆதிகேசவபெருமாள் கோயிலில், மாசிமகத்தை முன்னிட்டு சக்கரத்தாழ்வார் மற்றும் முதலியாண்டான் ஆகியோர்களுக்கு வ தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.
இந்த தீர்த்தவாரி உற்சவத்திற்காக உற்சவர்கள் கருடவாகனத்தில் ஸ்ரீஆதிகேசவபெருமாள், ராமாநுஜர் மற்றும் சக்கரத்தாழ்வார் புறப்பாடு நடைபெற்று ஸ்ரீசைல தோட்டத்தில் மூவருக்கும் சிறப்பு திருமஞ்சனமும் அதனை தொடர்ந்து சக்கரத்தாழ்வார் மற்றும் முதலியாண்டான் ஆகியோர்களுக்கு ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் தீர்த்தவாரி உற்சவமும் நடைபெற்றது. இந்த தீர்த்தவாரி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு ஸ்ரீஆதிகேசவபெருமாள், ராமாநுஜர் மற்றும் சக்கரத்தாழ்வாரை வணங்கி சென்றனர்.
CATEGORIES காஞ்சிபுரம்