மாவட்ட செய்திகள்
சித்திரை வருடப்பிறப்பு கோவில்களில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம்.

வருடம் தோறும் சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு அதிகாலையில் பக்தர்கள் கோயிலுக்குச்சென்று வழிபடுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கோரோனோ தொற்று காரணமாக ஆலயங்களில் வழிபாடு நடந்து. ஆனால் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் இந்த வருடம் கொரோனா நோய்த்தொற்று குறைந்த காரணத்தினால் அனைத்து ஆலயங்களும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதன் காரணமாக இன்று காலை திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவிலில் காலை முதலே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள ஐயப்பன் கோவிலிலும் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.


இதேபோல் திருச்சி சமயபுரம்மாரியம்மன் கோவில் , திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் ஆலயம் , ஸ்ரீரங்கம்ரங்கநாதர் திருக்கோயில் , வயலூர் முருகன் கோவில் உள்ளிட்ட ஆலயங்களிலும் மக்கள் காலை முதலே சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆலயங்கள் மற்றும் அப்பகுதி முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
