மாவட்ட செய்திகள்
இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகம் திறப்புவிழா.
இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகம் திறப்புவிழா மற்றும் தொழிலாளர் பேரவை துவக்க விழா மாவட்ட தலைவர் இளஞ்செழியன் தலைமையில் நடைபெற்றது.
இந்திய ஜனநாயக கட்சியின் கல்வி வள்ளல் அய்யா பாரிவேந்தரின் ஆசியுடன் இளைய வேந்தர் ஆணைக்கிணங்க திண்டுக்கல் மாவட்ட தலைமை அலுவலக திறப்பு விழா மற்றும் தொழிலாளர் பேரவை துவக்க விழா மாவட்ட தலைவர் இளஞ்செழியன் தலைமையில் மாநில தொழிலாளர் பேரவை பொதுச் செயலாளர் சேவியர் மற்றும் தலைவர் சேகர் முன்னணியில் நடைபெற்றது ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் பேரவை மாவட்ட பொதுச்செயலாளர் ஞானசேகர் நத்தம் தொகுதி செயலாளர் ஜோசப் நிலக்கோட்டை தொகுதி செயலாளர் செல்வகுமார் மாவட்ட இளைஞரணி செயலாளர் பரமசிவம் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து பேசிய மாநில தொழிலாளர் பேரவை பொதுச் செயலாளர் சேவியர் ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்ட தலைமை அலுவலகம் மற்றும் தொழிலாளர் பேரவை அலுவலகம் திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே திறக்கப்பட்டுள்ளது இதில் கல்வி வள்ளல் ஐய்யா பாரிவேந்தர் மற்றும் இளைய வேந்தரின் ஆணைக்கிணங்க ஏழை எளிய மற்றும் அனைத்து தொழிலாளர் குடும்பங்களுக்கும் சேவை செய்யும் அலுவலகமாக செயல்படும் என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.