BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

விபத்தில் இறந்தவருக்கு ரூ.18 லட்சம் காப்பீட்டு தொகை பெற போலி ஆவணம் தயாரித்து மோசடி-3 பேர் மீது வழக்கு.

சேலம்,ஏப்.14: விபத்தில் இறந்தவருக்கு ரூ.18 லட்சம் காப்பீட்டு தொகை பெற போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்த 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


சேலம் குகை பகுதியில் உள்ள ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் சண்முகநாதன். இவர் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்து உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கடந்த 2018-ம் ஆண்டு நடந்த விபத்தில் வீராணத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து காப்பீட்டு தொகை பெறுவதற்காக மணிகண்டனின் மனைவி ஹேமலதா சேலம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ரூ.18 லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து எங்கள் நிறுவன புலனாய்வு பிரிவு அலுவலர்கள் விசாரணை நடத்தினர். அப்போது காப்பீட்டு தொகை பெற போலியாக ஆவணம் தயாரித்தது தெரியவந்தது. மேலும் இதற்கு சேலத்தை சேர்ந்த செந்தில், தங்கமணி, வாழப்பாடியை சேர்ந்த ராஜாமணி ஆகிய 3 பேர் உடந்தையாக இருந்து உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். இந்த புகாரின் பேரில் செந்தில், தங்கமணி, ராஜாமணி ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )