மாவட்ட செய்திகள்
ஆத்தூர் அருகே கல்பகனூர் திருவள்ளுவர் நகர் பகுதியில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 132வது பிறந்தநாள் விழா.!

ஆத்தூர் அருகே கல்பகனூர் திருவள்ளுவர் நகர் பகுதியில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 131வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு ஆத்தூர் சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை வெற்றிச் செல்வன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும் அங்குள்ள பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நீர்மோர் வழங்கினர், இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய துணைசெயலாளர் தங்கவளவன்,சேலம் கிழக்கு மாவட்ட விவசாய அணி வீரமணி, தாண்டவராயபுரம் 2வார்டு கிளை செயலாளர் பெரியசாமி, ராமச்சந்திரன், உள்ளிட்ட விசிக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
