மாவட்ட செய்திகள்
மயிலாடுதுறையில் இந்திய மருத்துவக் கழக புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா.
இந்திய மருத்துவக் கழக மயிலாடுதுறை கிளைக்கு சீர்காழி சாலையில் புதிதாக கட்டப்பட உள்ள கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா யூனியன் கிளப் அரங்கில் நடைபெற்றது.
இந்திய மருத்துவக் கழக மயிலாடுதுறை கிளை தலைவர் மருத்துவர் பாரதிதாசன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் மருத்துவர் சௌமித்யா பானு, மூத்த மருத்துவர்கள் முத்து, செல்வம், ரவிச்சந்திரன், ராஜ்மோகன், சங்கரராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்திய மருத்துவக் கழக கிழக்கு மண்டல தலைவர் மருத்துவர் சிங்காரவேலு வாழ்த்துரை வழங்கினார். மாநிலத் தலைவர் மருத்துவர் பழனிச்சாமி மயிலாடுதுறையில் புதிதாக கட்டப்பட உள்ள கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி கல்வெட்டை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். இதில் இந்திய மருத்துவ கழக மயிலாடுதுறை கிளை மருத்துவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.