BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

சங்கத்தின் பெயரைச் சொல்லி பாடம் நடத்தாமல் ஏமாற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்!

வேலூர் மாவட்டம் ,காட்பாடி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றுபவர் செ.நா. ஜனார்த்தனன் .இவர் விஸ்வகர்மா வகுப்பைச் சேர்ந்தவர் . இவர் வேலூர் மாவட்ட விஸ்வகர்மா செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். அதேபோன்று தொழிற்கல்வி ஆசிரியர் சங்க மாநில தலைவராக பொறுப்பு வகிக்கிறார் .அத்துடன் சிறைவாசிகள் மறுவாழ்வு சங்கம், இந்திய செஞ்சிலுவை சங்க காட்பாடி கிளை செயலாளர் என பல பொறுப்புகளை தன்னகத்தே வைத்துக்கொண்டு சங்க வேலைகளை பார்ப்பதாக சொல்லிக்கொண்டு பள்ளி வேளைகளில் மாணவிகளுக்கு சரிவர பாடம் எடுக்க பயன்படுத்தாமல் இவர் தனது சொந்த வேலைகளை பார்த்து வருகிறார் .இவரை தட்டிக்கேட்க காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கூட முன் வருவதே கிடையாது. கேட்டால் எனக்கு கலெக்டரை தெரியும் , எனக்கு சிஇஓவை தெரியும், எனக்கு அமைச்சரை தெரியும் என்று கூறி அனைவரையும் மிரட்டி வைத்துள்ளார் .குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் இவர் செய்தியாளர்கள் சிலரை தனது கைக்குள் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் எடுத்துள்ள தொழிற்கல்வி பாடப்பிரிவில் பொதுத்தேர்வுகளில் சரிவர தேர்ச்சி விகிதமே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் பள்ளியில் எந்தவித விழா மற்றும் நிகழ்வுகள் நடந்தாலும் சபாரி சூட் சகிதமாக யார் அந்த நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளரோ அவருக்கு பக்கத்தில் நின்று கொண்டு புகைப்படங்கள் எடுக்க போஸ் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். பத்திரிகைகளை திறந்தாலே செ.நா. ஜனார்த்தனன் புகழ் பாடல் தான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். எதற்கெடுத்தாலும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வது பள்ளியின் தலைமை ஆசிரியையை பின்னுக்குத் தள்ளுவது அவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் செய்வது என்று இவர் பார்த்துக் கொள்கிறார். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் தலைமை ஆசிரியையை ஓரங்கட்டிவிட்டு இவர் தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்கிறார். இதை இவர் தொடர்ந்து செய்து வருகிறார். பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் உத்தரவை வாங்கி தருவதாக கூறி பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்வதாக இவருடன் பணியாற்றும் சக ஆசிரியர்கள் மத்தியில் கதை கதையாக கூறப்படுகிறது. ஆனால் அவரோ நான் அதுபோன்று எதுவும் செய்வதில்லை என்று கூறி மறுக்கிறார். ஆனால் இவர் இந்த வேலையில் தொடர்ந்து ஈடுபடுவது அனைவரும் நன்கு அறிந்த உண்மை என்பது குறிப்பிடத்தக்கது. நெருப்பில்லாமல் புகையாது என்பார்கள் .இவரும் வசூல் வேட்டை நடத்துவதை நிறுத்தாமல் தொடர்ந்து நடத்தி வருகிறார் .இது தெரிந்து அறிந்து இவரை நாடி செல்லும் பத்திரிகையாளர்களுக்கு ரூபாய் 100, ரூபாய் 200 என்று நாய்களுக்கு எலும்பு துண்டுகளை கொடுத்துவிட்டு மற்றவற்றை அமுக்கி கொண்டு சென்று விடுகிறார் இந்த பலே ஆசாமி. இவர் ஆசிரியர் வேலை செய்கிறாரா? இல்லை பள்ளியில் புரோக்கர் வேலை செய்கிறாரா? என்பது இன்னும் தெரியவில்லை. எப்போது எடுத்தாலும் தலையை ஆட்டுவதை தவிர இவர் கல்லுளி மங்கன் போல அமைதி காக்கிறா ர். இப்படி பலரிடம் வசூல் வேட்டை நடத்திய பணத்தில் தற்போது கார் வாங்கி கொண்டு நகரில் ஹாயாக வலம் வருகிறார். இவருக்கு தெரியாமல் பள்ளியில் எந்த விழாவும் நடக்கக்கூடாது. அந்த விஷயத்தில் இவர் கவனமாக உள்ளார் .பள்ளி திறந்தவுடன் நடைபெறும் மாணவர் சேர்க்கையில் இவர் என்னமோ தலைமையாசிரியை போன்று அமர்ந்துகொண்டு போவோர் வருவோரிடம் வைட்டமின் ‘ப ‘கற ப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். பார்ப்பதற்கு சாதுவாக தெரியும் இந்த ஜனார்த்தனன் பசுத்தோல் போர்த்திய புலி என்பது சிலருக்கு தெரியும் ,பலருக்கு தெரியாது. இப்படி நிலைமை தொடர்ந்து விபரீதமாக போய்க் கொண்டுள்ளது. கல்வி பாழாய் போய்க் கொண்டுள்ளது .இதை கல்வித்துறையில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி கண்டுகொள்வதில்லை. இவரது நடவடிக்கைகளை கண்காணிப்பதும் இல்லை .இதே நிலை கடந்த அதிமுக ஆட்சியிலும் நீடித்து வந்தது. பூனைக்கு மணி கட்டுவது யார்? என்ற ரீதியில் கடந்த கால ஆட்சியில் ஐந்து ஆண்டுகள் சிறப்பாக கல்லா கட்டிய ஜனார்த்தனன் தற்போது திமுக ஆட்சியிலும் சிறப்பாக கல்லா கட்ட ஆரம்பித்து உள்ளார். கல்வித்துறை அமைச்சருக்கு ஒரு சால்வை வாங்கிக் கொண்டு தனது சகாக்களுடன் சென்று தான் மாநில தலைவர் என்றும் பல்வேறு சங்கங்களில் பொறுப்பு வகிப்பதாகவும் கூறிக்கொண்டு சால்வை ஒன்றை அணிவித்து விட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார் .இந்த நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. யார் பள்ளி கல்வி துறை அமைச்சராக இருந்தாலும் அவருக்கு சால்வை போட்டு அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு வந்து பத்திரிகைகளுக்கு போஸ் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் இந்த விளம்பர வெறியர் ஜனார்த்தனன். இதே நிலை கடந்த பல ஆண்டுகளாக காட்பாடியில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் செல்லுமிடமெல்லாம் மாநில செயற்குழு கூட்டம், ஆலோசனை கூட்டம் என்ற பெயரில் அரங்கேறிக் கொண்டு உள்ளது .ஆதலால் இதுபோன்ற நபர்கள் என்ன பணியாற்றுகிறார்கள், இவர்களது பின்புலம் என்ன ?இவர்களை ஏன் நம்புகின்றனர் ,இவர்களை கண்டு ஏன் ஆசிரியர்கள் பயப்படுகின்றனர் என்பதற்கு கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் கூற வேண்டும் என்று இவரால் பாதிக்கப்பட்ட பலர் அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த திமுக ஆட்சியிலும் இவரும் ,இவரது நடவடிக்கையும் தடுக்கப்படாமல் சென்றால் இனி ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று சொல்வது போல இவரது ஆட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்லும் என்பது மட்டும் நிதர்சன உண்மை .திமுக காலகட்டத்திலாவது பூனைக்கு மணி கட்டுவது யார்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.செ.நா. ஜனார்த்தனன் போன்ற நடிகர்களின் முகத்திரையை திமுக ஆட்சிக் காலத்திலாவது அப்புறப்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )