மாவட்ட செய்திகள்
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதில் 36-வது வார்டு பகுதியில் அதிமுக சார்பில் ஜானகிராமன் எனும் 35 வயது இளைஞர் போட்டியிடுகிறார்.
நேற்று வரை தனது வார்டு பகுதியில் வாக்கு சேகரித்து வந்த நிலையில் மாலை முன்னாள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிமுகக் கூட்டத்தில் கலந்து கொண்டு அங்கு வந்த அப்பகுதி மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
இந்நிலையில் அதிகாலை 3 மணியளவில் அவரது வீட்டில் அவரது தம்பியுடன் உறங்கி வந்த நிலையில் , அவரது தம்பி இயற்கை உபாதைக்காக எழுந்தபோது ஜானகிராமன் கீழே விழுந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரை தூக்க முயற்சித்த போது அவரது கழுத்தில் இருக்குமான துண்டுகள் சுற்றப்பட்டிருந்தது.
அதனை அகற்றி அருகிலிருந்த நபர்களுடன் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துபோது அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து விஷ்ணு காஞ்சி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அதன்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிர் இழப்பு ஏற்பட காரணம் பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரியவரும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலையில் அவரது மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் கடந்த மூன்று தினங்களாக அவருக்கு வந்த அவரது கைபேசி உரையாடலை முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக வினர் விஷ்ணு காஞ்சி காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோட்டை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளரின் சமரசத்தின் பேரில் முறையாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததின் பேரில் மறியல் கைவிடப்பட்டது இதுகுறித்து புகார் மனு அவரது உறவினர்கள் மற்றும் அதிமுக சார்பில் அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் காஞ்சிபுரம் செங்கல்பட்டு சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.