BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

சாலை அமைக்க பயன்படுத்தும் ஜல்லியை வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் திருட்டு கும்பல்!

வேலூர்,காட்பாடி லட்சுமி நகரில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்படும் சாலை பணிக்காக கொட்டப்பட்டுள்ள ஜல்லியை திருட்டுத்தனமாக எடுத்து சென்று வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் கும்பல் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?. வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி பணிக்காக சாலை அமைத்தல் மற்றும் கழிவுநீர் வாய்க்கால் வெட்டுதல் தெரு விளக்கு மற்றும் நடைபாதை காக பாதை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நகரை அழகுபடுத்தும் விதமாக முழுவீச்சில் நடந்து வருகிறது வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் இதுபோன்ற அடிப்படை வசதிகள் உள்ள பகுதியாக வேலூர் மாநகராட்சியை மாற்ற இதுபோன்ற பணிகள் ஜரூராக நடந்து வருகிறது. அதில் காட்பாடி பகுதியில் மாநகராட்சி வார்டு எண் 2 பகுதிக்கு உட்பட்ட லட்சுமி நகரில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக ஜல்லி கொண்டுவந்து சாலை முழுவதும் பரப்பியுள்ளனர் .மீதமுள்ள ஜல்லிகள் ஆங்காங்கே குவியல்களாக விடப்பட்டுள்ளன. அவை எங்கெங்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது அந்த இடங்களில் மீண்டும் கொட்டுவதற்காக விட்டுச் சென்றுள்ளனர் மாநகராட்சி கவுன்சிலர்கள். இதை சில திருடர்கள் அந்த ஜல்லியை கொத்தனாரை வைத்து திருட்டுத்தனமாக அள்ளிச் சென்று தங்களது வீடுகளுக்குள் உள்ள பணிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இன்றைக்கு ஜல்லி 5 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகிறது. இந்த ஜல்லியை இலவசமாக திருடி எடுத்துச்சென்று தனது சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர் . இது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. இங்குள்ள திருட்டு கும்பல் சாலையில் உள்ளதை தைரியமாக எடுத்துள்ளது.


இந்த கும்பல் மீது மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்களும் ,சமூக ஆர்வலர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர் .பொது நலம் குறைந்து சுயநலம் அதிகம் உள்ள இதுபோன்ற கயவர்களை சட்டத்தின் முன் அடையாளம் காட்ட வேண்டும். ஜல்லியை எடுத்துக்கொள்ளச் சொல்லி யார் இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?. யாரை கேட்டு திருடுகிறார்கள் என்பதும் புரியாத புதிராக உள்ளது இவர்கள் இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாநகராட்சி நிர்வாகம் தயக்கம் காட்டக்கூடாது. நடவடிக்கை எடுக்கவில்லை எனில் எடுக்கப்பட்ட 3 யூனிட் ஜல்லி என்ன தொகையோ அதையாவது வசூல் செய்ய வழிவகை செய்ய வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா ?அல்லது யார் வீட்டு இழவோ பாய் போட்டு அழுகிறது நமக்கு என்ன என்று கண்டும் காணாமல் விட்டு விடப் போகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் .மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் தனது கவனத்துக்கு இந்த திருட்டை எடுத்துக்கொண்டு காட்பாடி பகுதியில் நடக்கும் அட்டூழியங்களை தடுப்பாரா என்பதையும் ,அரசு சொத்து கொள்ளை போவதை தடுத்து இது போன்று மற்றவர்கள் செய்யாமல் இருப்பதற்கு ஒரு முன்னுதாரணமாக அமையவேண்டும் என்பதற்கும் இந்த விஷயத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரும் எதிர்பார்க்கும் ஒரு விஷயமாக உள்ளது. ஆணையர் அசோக்குமாரின் அதிரடி தொடருமா? இல்லை வழக்கம்போல் அமைதி காப்பாரா? என்பதை காலம்தான் முடிவு செய்யும் .திருடர்களை தப்பவிடப் போகிறார்களா அல்லது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )