BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

கிருஷ்ணசுவாமி கோவில் சித்திரை தேரோட்டம்.

நாகர்கோவில் வடசேரி கிருஷ்ணசுவாமி கோவில் சித்திரை திருவிழாவையொட்டி தேரோட்டம் இன்று நடைபெற்றது இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

நாகர்கோவில் வடசேரி கிருஷ்ண சுவாமி கோவில் சித்திரை திருவிழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் முதல் நாளான நேற்று கணபதி ஹோமமும் அதனைத் தொடர்ந்து அபிஷேகமும் நடைபெற்றது தொடர்ந்து சபரிமலை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு பூஜைகள் நடத்தி கொடி ஏற்றி வைத்தார் மூன்றாம் நாள் திருவிழாவில் நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சியும் நான்காம் நாள் திருவிழா அன்று சிறப்பு பட்டிமன்றமும் நடைபெற்றது. ஒன்பதாம் நாள் திருவிழா இன்று காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எம் .ஆர். காந்தி ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர் இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி கவுன்சிலர்களான சுனில் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் 4 ரத வீதிகளையும் சுற்றி வந்து நிலைக்கு நின்றது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )