BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

புதுச்சேரியின் கடற்கரை திருவிழாவில் காத்தாடி விடும் நிகழ்ச்சி வண்ணமயமாக நடந்தது.

புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்தவும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும் முதன் முறையாக I SEE PONDY 2022 -என்ற கடற்கரை திருவிழா நேற்று துவங்கியது.புதுச்சேரியில் உள்ள கடற்கரையில் இசை நிகழ்ச்சி, நாட்டுப்புற கலை நிகழ்ச்சி,கடல் உணவு திருவிழா மற்றும் வாலிபால், பேஷன் ஷோ,என பல நிகழ்ச்சிகள் 17 ம் தேதி வரை நடத்தப்படுகிறது.

இதில் கலங்கரை விளக்கம் அருகில் உள்ள மெரினா கடற்கரையில் காத்தாடி விடும் நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது.இதில் ஏராளமான இளைஞர்களும் சிறுவர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு காத்தாடியை பறக்க விட்டு வருகின்றனர். காத்தாடி விட பழகாதவர்களுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் காத்தாடி விட பயிற்சியும் அளித்தனர்.


இது சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை கவரும் வகையில் பல்வேறு வண்ண பட்டங்களை பறக்க விட்டனர்.

இதனைத் தொடர்ந்து மாலை கடற்கரையில் கரகாட்டம் தப்பாட்டம் ஒயிலாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நடைபெற உள்ளது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )