மாவட்ட செய்திகள்
நாகர்கோவில் வந்த ரயில் 19 கிலோ கஞ்சா பறிமுதல். ரயில்வே போலீஸ் நடவடிக்கை.

நாகர்கோவில் ரயில் நிலையம் வந்த மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் 19 கிலோ கஞ்சா கண்டு பிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது அனாதையாக கிடந்த இந்த கஞ்சாவை கொண்டு வந்த மர்ம ஆசாமி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மும்பையிலிருந்து நாகர்கோவிலுக்கு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றுவந்து கொண்டிருந்தது. இந்த ரயில் நான்குநேரி ரயில் நிலையம் வந்தபோது நாகர்கோவில் ரயில்வே போலீசார் ஒவ்வொரு பெட்டியாக சோதனை நடத்தி வந்தனர். வள்ளியூர் ரயில் நிலையம் வந்தபோது எக்ஸ்பிரஸ் ரயிலில் உள்ள பெட்டி ஒன்றில் யாரும் கேட்பாரற்ற நிலையில் ஒரு பேக் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் இதனை பிரித்து சோதனை செய்தபோது அதில் 19 கிலோ எடையுள்ள கஞ்சா சிறுசிறு பார்சலாக கட்டப்பட்டு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சா இதனையடுத்து கஞ்சா பார்சல்கள் அடங்கிய பேக் நாகர்கோவில் ரயில் நிலையம் கொண்டு வரப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து நாகர்கோவில் ரயில்வே இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா தலைமையிலான போலீசார் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கஞ்சாவை கடத்தி வந்த மர்ம நபர்கள் யார் ? இந்த கஞ்சா பார்சல்கள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது?யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது? என்ற விபரங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகர்கோவில் வந்த ரயிலில் 19 கிலோ கஞ்சா பிடிப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
