மாவட்ட செய்திகள்
பேர்ணாம்பட்டு பத்திரிகையாளர்களை புறக்கணிக்கும் நகராட்சி ஆணையாளர் சையது உசேன்!!!!

வேலூர்,பேர்ணாம்பட்டு நகராட்சி ஆணையாளராக இருப்பவர் சையது உசேன் .இவர் பேரணாம்பட்டு நகராட்சி ஆணையாளராக பதவி ஏற்ற நாள் முதலாக பெரும்பாலான வேலைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது . நகரின் முழுவதும் உள்ள விளக்குகள் பகல் முழுவதும் எரிகிறது. இதனால் நகராட்சிக்கு தேவையற்ற பணம் விரயமும், மின்சாரமும் வீணாகிறது.எல்லாவற்றுக்கும் மேலாக நகராட்சி ஆணையாளர் உசேன் நகராட்சியில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளை பத்திரிகையாளர்களுக்கு தெரிவிப்பதில்லை. அழைப்பும் அனுப்பி வைப்பதும் இல்லை. பேரணாம்பட்டு நகராட்சியில் எத்தனையோ நகராட்சி ஆணையாளர்கள் பதவி வகித்தார்கள் .ஆனால் சையது உசேன் அளவிற்கு இதை யாரும் மந்தமாகவும் ,மெத்தனமாகவும் வேலை செய்ததும் இல்லை. பத்திரிக்கையாளர்களை புறக்கணித்ததும் இல்லை. ஆனால் சையது உசேன் பத்திரிகையாளர்களை மதிப்பதே கிடையாது. குறிப்பாக சமீபத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் புதிய நகர மன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா நடந்தது. புதிய நகர மன்ற தலைவர் ,நகரமன்றத் துணைத்தலைவர் பதவி ஏற்பு இருக்கிறது என்று பத்திரிகையாளர்களுக்கு முறையான அழைப்பு விடுக்கவில்லை. நகராட்சியில் நடைபெறும் விழாக்களுக்கு தங்களுக்கு முறையாக அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு பத்திரிக்கையாளர்களின் சங்க வேலூர் மாவட்ட துணைத் தலைவர் டாக்டர் .கதிரேசன் கோரிக்கை விடுத்தார். சையது உசேன் வேண்டும் என்றே மேற்கண்ட விழாக்களுக்கு பத்திரிகையாளர்களுக்கான முறையான அழைப்பை கொடு
க்காமல் மெத்தனமாக செயல்படுகிறார் .நகராட்சி ஆணையாளர் சையது உசேன் மீது வேலூர் மாவட்ட கலெக்டர் குமரவேல் பாண்டியன், நகராட்சி, பேரூராட்சிகளின் இயக்குனர் குபேந்திரன் ஆகியோர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பத்திரிகையாளின் எதிர்பார்ப்பாக உள்ளது . இவர் மீது துறை ரீதியான தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே பத்திரிகையாளர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
