BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

செங்கம் அருகே அரசுப் பேருந்து விபத்து 20க்கு மேற்பட்டோர் படுகாயம்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த விண்ணவனூர் அருகே திருவண்ணாமலையிலிருந்து பெங்களூர் நோக்கி சென்ற அரசு பேருந்து எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் தவிர்ப்பதற்காக அரசுப் பேருந்து ஓட்டுனர் வாகனத்தை வலது புறம் திருப்ப முயன்றுள்ளார்.

இருப்பினும் பேருந்து இருசக்கர மீது மோதியது பின்னர் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகில் உள்ள பள்ளத்தில் இறங்கியதில் ஓட்டுனர் உட்பட பேருந்தில் பயணித்த 20க்கும் மேற்பட்டோருக்கும் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியினர் மற்றும் குழந்தை உட்பட பலருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது அருகிலிருந்த அப்பகுதி மக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் திடீரென ஏற்பட்ட இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )