BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருநங்கையர் தினத்தை முன்னிட்டு காவல் உதவி ஆணையர் அலுவலக வளாகத்தில் உழைக்கும் திருநங்கைகள் மரக்கன்று நட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தமிழகத்தில் ஏப்ரல் 15 ஆம் தேதி வருடம்தோறும் திருநங்கைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் அழகு நிலையம், தையல் கடை, விவசாயம், கேட்டரிங் சர்வீஸ் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்யும் உழைக்கும் திருநங்கைகள் திருச்சி கண்டோன்மெண்ட் உதவி காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டனர். இந்த நிகழ்ச்சியில் கண்டோன்மெண்ட் காவல் நிலைய உதவி ஆணையர் அஜய்தங்கம் மற்றும் காவல் துறையினர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டனர்.

முன்னதாக தவறான பாதைகளில் செல்லாமல் உழைக்கும் திருநங்கைகளுக்கு பாராட்டு தெரிவித்து சால்வை அணிவித்தார். மேலும் உங்களைப் போன்று உழைக்கும் திருநங்கைகள் மற்றும் திருநங்கைகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )