மாவட்ட செய்திகள்
சித்திரை பிறந்ததையொட்டி டெல்டா மாவட்டங்களில் பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் நல்லேறு பூட்டி இந்த ஆண்டுக்கான விவசாய பணிகளை தொடங்கினர்.


உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்வர் என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க தொழில்களில் எல்லாம் சிறந்த தொழிலாக வேளாண்தொழில் விளங்குகிறது. தமிழகத்தில் மன்னர்கள் காலத்தில் தங்க ஏர் பூட்டி உழுது விவசாய பணிகளை தொடங்கியதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் சித்திரை தொடக்கத்தில் ந்ல்லேறு பூட்டி விவசாயப் பணிகளைத் தொடங்குவது வழக்கம் தற்போது சித்திரை பிறந்துள்ளதால் இந்த ஆண்டுக்கான விவசாய பணிகளை விவசாயிகள் நல்லேறு பூட்டி உழுது தொடங்கி உள்ளனர் தஞ்சை மாவட்டம் குருங்குளம் தோழகிரிப்பட்டி தங்கப்நன் உடையான்பட்டி அற்புதாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இன்று ஒரே நாளில் கிராம மக்கள் ஒன்று திரண்டு தங்கள் தங்கள் கிராமங்களில் வயல்களில் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வழிபாடுகள் செய்து மாடுகளை ஏர்பூட்டி வயலில் பல்வேறு உழுதனர்.




பெண்கள் நெல்மணிகளை தூவினர். இந்த ஆண்டு நல்ல மழை பெய்து குறுவை சம்பா தாளடி என முப்போக நெல் சாகுபடி நடைபெறவேண்டும் இதேபோல் கரும்பு எள் வாழை பருத்தி கடலை உள்ளிட்ட அனைத்து பயிர்களும் நன்கு விளைந்து விவசாயிகள் வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும் என நம்பிக்கை தெரிவித்தனர் மேலும் நெல் கரும்பு உள்ளிட்ட அனைத்து பயிர்களுக்கும் அரசு கட்டுப்படியான விலையை அறிவித்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
