மாவட்ட செய்திகள்
ரயில் நிலையத்தில் பாமக ஆர்ப்பாட்டம்!

வேலூர், மத்திய அரசு தமிழகத்தில் கிடப்பில் போட்டுள்ள ரயில் திட்டங்களை விரைந்து செயல்படுத்த கோரி பாட்டாளி மக்கள் கட்சியினர் காட்பாடி ரயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி ரயில் நிலையத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கிழக்கு மாவட்ட செயலாளர் இளவழகன் தலைமையில் மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ள தமிழகத்திற்கான ரயில் திட்டங்களான நகரி- திண்டிவனம், ரயில் பாதை திட்டம் உள்ளிட்ட திட்டங்களை விரைந்து முடிக்க வலியுறுத்தியும் ,மாநில அரசு மத்திய அரசிற்கு ரயில் திட்டங்களை விரைந்து முடிக்க கோரி அழுத்தம் தர கோரியும் ஆர்ப்பாட்டமானது நடந்தது. இதில் மேற்கு மாவட்ட செயலாளர் குமார், மாவட்டத் தலைவர் வெங்கடேசன், நிர்வாகிகள் துளசிராமன் ,பாபிகதிரவன் உள்ளிட்ட திரளான பாமகவினர் கலந்துகொண்டு தமிழக ரயில் திட்டங்களை விரைந்து செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரி கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க மறுத்து வருவதால் ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
