மாவட்ட செய்திகள்
தீயணைப்பு தொண்டு நாள் விழா.

வேலூர், தமிழ்நாடு தீயணைப்பு தொண்டு நாள் விழா 14.04.2022 முதல் வரும் 24.04.2022 ஏழு நாட்கள் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் “தீ பாதுகாப்பு அறிவோம்” “உற்பத்தியை அதிகரிபோம்” என்பதை வலியுறுத்தி காட்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை பொது மக்களிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் நிலைய அலுவலர் ஆர்.கோபாலகிருஷ்ணன், பணியாளர்கள் வேலு, தீரன், சதீஷ்குமார், அருண்ராஜ், ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
