BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

செங்கத்தில் இலவச மின்இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மின்னிணைப்பு உத்தரவு வழங்கும் விழா.

விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசு செயல்படுவதாக செங்கம் சட்டமன்ற உறுப்பினர் பெருமிதம்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தனியார் மண்டபத்தில் காணொளி மூலம் தமிழக முதல்வர் ஒரு லட்சம் மின் இணைப்பை வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மின் இணைப்பு உத்தரவு வழங்கும் நிகழ்ச்சியில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி கலந்துகொண்டு பயனாளிகளுக்கு இலவச மின் இணைப்பு உத்தரவினை வழங்கினார்.

பின்னர் சிறப்புரையாற்றிய சட்டமன்ற உறுப்பினர் கடந்த பத்தாண்டுகளில் அதிமுக விவசாயிகளுக்காக 20 ஆயிரம் மின் இணைப்புகள் மட்டுமே வழங்கி உள்ளது.

ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த 10 மாத காலத்திலேயே ஒரு லட்சம் மின் இணைப்புகளை வழங்கி விவசாயிகள் மேம்படும் வகையில் நடவடிக்கை எடுத்து
விவசாயிகள் மீதும் பொதுமக்கள் மீதும் அக்கறை கொண்ட ஆட்சியாக திமுக விளங்கி வருவதாகவும் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் உட்கோட்ட பகுதிகளில் 389 இலவச விவசாய மின் இணைப்புகள் கடந்து 886 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கி உள்ளது எனவும் இதற்காக அயராது பாடுபட்ட செயற்பொறியாளர்கள் உதவி செயற்பொறியாளர்கள் பொறியாளர்கள் மற்றும் மின் ஊழியர்கள் அனைவருக்கும் தனது பாராட்டை தெரிவிப்பதாக செங்கம் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

மேலும் இந்த நிகழ்வில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களுக்கு இலவச மின் இணைப்பு வழங்கிய தமிழக முதல்வருக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )