BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

பேரணாம்பட்டு தாலுகா சிறப்பு மனுநீதிநாள் முகாம்!

பேரணாம்பட்டு தாலுக்கா ராஜக்கல் மேல் கொத்தக் குப்பம் ஆகிய கிராமங்களுக்கான சிறப்பு மனுநீதிநாள் முகாம்ராஜக்கல் கிராமத்தில் நடைப்பெற்றது. இம்முகாமிற்கு (கலால்) உதவி ஆணையர் த.வெங்கட்ராமன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். பேரணாம்பட்டு தாசில்தாரர் வெங்கடேசன் அனைவரையும் வரவேற்று பேசினார். பேரணாம்பட்டு சமூக திட்ட பாதுகாப்பு தாசில்தாரர் ரமேஷ் விளக்கவுரையாற்றினார். பேரணாம்பட்டு ஒன்றிய குழு பெரும் தலைவர்.ஜே.சித்ரா ஜனார்த்தனன், துணைத் தாசில்தாரர் இல. வடிவேலு ஆகியோர்கள் சிறப்புரையாற்றினர். இம்முகாமில் உதவிதொகைகளையும், வீட்டுமனைப்பட்டாக்களும், வாரிசு சான்றிதழ்களும், இறப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இம்முகாமில் வருவாய் ஆய்வாளர் பஞ்சாட்சரம் வட்டவழங்கல் அலுவலர் கமலகண்ணன், கிராம நிர்வாக அலுவலர்கள் எம்.உதயகுமார். எம்.ஜெயக்குமார், சிவராமன், மேகநாதன், ஜெய சங்கர், குமரவேல், சவுந்தரி, வெங்கடேசன், கோபிநாத், அன்பரசன், அருண்குமார், வடிவேலு, கிராம உதவியாளர்கள் கமலாபுரம் சுரேஷ்குமார், கோபால், சத்தியநாதன், வரதன், மனோகரன், குப்புசாமி, சுகுமார், பாலாஜி,ஜோதி, சுந்தரேசன், அனிதா, ஒன்றிய குழு உறுப்பினர்கள் எஸ்.அபிராமி சேட்டு, ஜி.சரஸ்வதி குருசாமி, ராஜக்கல் ஊராட்சி மன்றத் தலைவர் ஜி.டி. கருணாகரன்.ராஜக்கல் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் ஏ.எஸ்.விஜயகுமார் உள்ளிட்டோர் பலர் கலந்துகொண்டனர். முடிவில் மேல்பட்டி உள்வட்ட வருவாய் ஆய்வாளர் சரஸ்வதி நன்றி கூறினார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )