BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

ரயில்வேயில் பணி புரியும் வடநாட்டவரை பணியிட மாற்றம் செய்ய கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.

ரயில்வேயில் பணி புரியும் வடநாட்டவரை பணியிட மாற்றம் செய்ய கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது – எஸ்.ஆர்.எம்.யு தொழிற்சங்க பொதுச்செயலாளர் வீரசேகரன் பேட்டி.

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு சதன் ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் இரண்டாவது முறையாக அகில இந்திய ரயில்வே தொழிற்சங்கத்தின் தேர்தலில் கண்ணையா இரண்டாவது முறையாக செய்யப்பட்டதை கொண்டாடும் வகையில் தொழிற்சங்க பொதுச்செயலாளர் வீரசேகரன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெடி வெடித்து கொண்டாடினர்.

தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த வீரசேகரன் அகில இந்திய ரயில்வே தொழிற்சங்க தேர்தலில் இரண்டாவது முறையாக கண்ணையா தேர்வு செய்யப்பட்டுள்ளது பெருமைக்குரிய விஷயமாகும்.


தற்போது நடைபெற்ற தொழிற்சங்க மாநாட்டில் ரயில்வேயை தனியார் மயமாக்குவது, ரயில்வேக்கு சொந்தமான சொத்துக்களையும் ரயில் நிலையங்களிலும் தனியாருக்கு தாரை வார்ப்பது எதிர்த்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

மேலும் சுமார் 2.5 லட்சம் காலி இடங்களை உடனடியாக பூர்த்தி செய்யப்பட வேண்டும், மேலும் ரயில்வே பணிபுரியும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட அனைத்து வடமாநில த்தாரையும் அவர்களது ஊர்களுக்கு பணியிட மாற்றம் செய்ய மாநாட்டில் கோரிக்கைகள் வைக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )