மாவட்ட செய்திகள்
மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த தேனூரில் இன்று நடைபெற்ற விழாவில் 171 மாணவ மாணவிகளுக்கு இலவச கல்வி உபகரணங்களை வழங்கினார் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த தேனூரில் வேர்ல்டு விஷன் இந்தியா என்ற அமைப்பு சார்பாக இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் 1.30 லட்சம் மதிப்பில் பத்தாம் வகுப்பு படிக்கும் 171 மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வி உபகரணங்களை வழங்கி சிறப்பித்தார்.
அதனையடுத்து தேனூரை தூய்மையான மாதிரி கிராமமாக மாற்றும் முயற்சியாக அங்குள்ள குடும்பங்களுக்கு 1.76 லட்சம் மதிப்பில் மூன்று வகையான குப்பைத் தொட்டிகளையும் அமைச்சர் வழங்கினார். அதற்கடுத்து மருங்காபுரி ஒன்றியத்தில்138 கிராமங்களில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வதற்காக பிரச்சார வாகனத்தையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மணப்பாறை எம்எல்ஏ அப்துல் சமது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.