மாவட்ட செய்திகள்
காஞ்சிபுரம் அ.தி.மு.க., பொறுப்பாளர் வள்ளிநாயகம் ஏற்பாட்டில் சித்திரகுப்தர் கோவிலில் நடிகர் ரோஜா அன்ன தானம் வழங்கினர்.
ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரோஜா பௌர்ணமி நாளான நேற்று காஞ்சிபுரத்தில் உள்ள சித்திரகுப்தர் கோவிலில் சாமி தரிசனம் செய்து பின்பு அதிமுக மாவட்ட கழக பொருளாளர் வள்ளிநாயகம் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே. வி. எஸ்.சோமசுந்தரம் ஏற்பாட்டில் கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
நடிகை ரோஜா ஆந்திர மாநிலத்தில் விளையாட்டுத் துறை அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து நடிகை ரோஜா காஞ்சிபுரம் காமாட்சி அம்மனை தரிசிக்க நேற்று காலை காஞ்சிபுரம் வந்தார். காமாட்சி அம்மன் கோவில் அர்ச்சகர்கள் நடிகை ரோஜாவிற்கு வரவேற்பு அளித்தனர்.
பின்னர் நடிகை ரோஜா சிறப்பு அபிஷேகத்தில் கலந்து கொண்டு அம்மனை தரிச்சித்தார்.
இதையடுத்து சித்ரா பெளர்ணமியெட்டி காஞ்சிபுரம் சித்திரகுப்தர் சிறப்பு வழிபாடு நடந்தது. இந்த கோவிலிலும் நடிகை ரோஜா சுவாமி தரிசனம் செய்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க., பொருளாளர் வள்ளிநாயகம் தலைமையில் சித்திரகுப்தர் கோவில் நுழைவு வாயிலில் அன்ன தானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது நிகழ்ச்சியில் நடிகர் ரோஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
அ.தி.மு.க., முன்னாள் மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் கணேசன், சுசீலா வள்ளிநாயகம் காஞ்சிபுரம் மாமன்ற உறுப்பினர் வேலரசு உள்ளிட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.