மாவட்ட செய்திகள்
ஓராண்டில் ஒரு இலட்சம் மின் இணைப்புகள் பெற்று பயனடைந்த விவசயிகளுடன் காணொலி காட்சி மூலம் முதல்வர் கலந்துரையாடினார்.
மயிலாடுதுறை, தமிழ்நாடு மின்சார வாரியம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் சார்பில் ஓர் ஆண்டில் 1 லட்சம் விவசாயிகள் மின் இணைப்பு பெற்றவர்களிடம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் கலந்துரையாடி விழா பேருரையாற்றினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஒரு இலட்சம் புதிய இலவச உழவர் மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தினை கடந்த 23.09.2021 அன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தொடங்கி வைத்தார். ஓராண்டு காலம் முடிவதற்குள் ஒரு இலட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் தரப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்நிகழ்ச்சி காணொலி காட்சி மூலம் இரண்டு இடங்களில் நடைபெற்றது.
மயிலாடுதுறை கோட்டத்தில் மன்னம்பந்தல் ஏவிசி பொறியியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
சீர்காழி கோட்டத்தில் நவகிரகா ரிசார்ட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம். பன்னீர்செல்வம் கலந்துக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் 400-க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். மயிலாடுதுறை கோட்டத்தில் 346 விவசாயிகளும், சீர்காழி கோட்டத்தில் 456 விவசாயிகளும் என மொத்தம் 802 விவசாயிகள் மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிய இலவச உழவர் மின் இணைப்புகளை பெற்றுள்ளனர்.
இந்நிகழ்ச்சிகளில் மயிலாடுதுறை நகர்மன்றத் தலைவர் என்.செல்வராஜ், மயிலாடுதுறை கோட்ட செயற்பொறியாளர் பொறியாளர் வை.முத்துகுமரன், சீர்காழி கோட்ட செயற்பொறியாளர் பொறியாளர் லதா மகேஸ்வரி, மயிலாடுதுறை கோட்ட உதவி செயற்பொறியாளர் பொறியாளர்.டி.கலியபெருமாள், மின் வாரிய பணியாளர்கள் மற்றும் திரளான விவசாயிகள் கலந்துக்கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.