மாவட்ட செய்திகள்
சின்னாளபட்டி -ரூபாய் 45 லட்சம் மதிப்பில் புதிய தரைப்பாலம் கட்ட ஆணை பிறப்பித்த தமிழ்நாடு கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்களுக்கு சின்னாளபட்டி நகர பொதுமக்கள் நன்றிகூறி நெகிழ்வு.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி புறவழிச்சாலையில் பொது மயானம் அருகே தரைப்பாலம் உள்ளது .இந்த பாலமானது கடந்த 25 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட நிலையில் உயரம் குறைவாக உள்ளதால் இதனால் மழைக்காலங்களில் சிறுமலையிலிருந்து வரும் மழைநீரால் இந்தப் பாலம் மூழ்கி விடுகிறது .இதனால் பொதுமக்கள் பாலத்தில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து தரைப்பாலம் புதுப்பிக்க வேண்டும் என தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமியிடம் சின்னாளப்பட்டி பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் பெரியசாமி புதியதரைபலம் கட்டி கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதனடிப்படையில் பழைய தரைப்பாலம் முற்றிலும் அகற்றப்பட்டு புதிய பாலம் அமைப்பதற்கு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இதில் மழை நீர் எளிதில் கடந்து செல்லும் வகையில் ரூபாய் 45 லட்சம் மதிப்பில் இந்த புதிய பாலம் கட்டும் பணி துவங்கியுள்ளது. மேலும் பொதுமக்கள் கோரிக்கை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த அமைச்சருக்கு சின்னாளபட்டி நகர பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.