மாவட்ட செய்திகள்
கன்னியாகுமரி அருகே உள்ள ரோகிணி பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை சார்பாக தொழில்நுட்ப கருத்தரங்கம்.
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே பால் குளத்தில் அமைந்துள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை சார்பாக தொழில்நுட்ப கருத்தரங்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தலைவர் நீலமார்த்தாண்டன் , துணைத் தலைவர் முனைவர் நீல விஷ்ணு, நிர்வாக இயக்குனர் முனைவர் பிளஸ்ஸி ஜியோ ஆகியோர் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர்.ராஜேஷ் தலைமை உரையாற்றினார். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மணிகண்ட குமரன், முதன்மைப் பொறியாளர் ,எபிகார், அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு துறை சார்ந்த அறிவுரை கூறினார்.
கணினி மற்றும் பொறியியல் துறை தலைவர் பேராசிரியர் ஷகிலா தேவி விருந்தினர்களை வரவேற்று பேசினார்.
தொடர்ந்து மாணவர்களுக்கு போட்டிகளும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை பேராசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.