மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர் ஈஸ்டர் பண்டிகையையொட்டி தஞ்சையில் இயேசுகிறிஸ்து உயிர்த்தெழும் தத்ரூப காட்சி செய்யப்பட்டு மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
புனித வெள்ளிக்கிழமை அன்று சிலுவையில் அறையப்பட்டு கொலை செய்யப்பட்ட இயேசு கிறிஸ்து மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை உயிர்த்தெழுந்த நாளை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் திருநாளாக கொண்டாடி வருகின்றனர்.
இதையொட்டி தஞ்சாவூர் மறைமாவட்ட பேராலயமான திருஇருதய பேராலயத்தில் ஈஸ்டர் பிரார்த்தனை முடிந்ததும் வியாகுல அன்னை ஆலயத்தில் இயேசுகிறிஸ்து உயிரோடு எழுந்து வரும் மாதிரி தத்ரூப காட்சி வாணவேடிக்கைகள் உடன் நிகழ்த்திக் காட்டப்பட்டது.
அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.