மாவட்ட செய்திகள்
தேனி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் எல்எஸ் மில் கூடைப்பந்தாட்ட கழகம் நடத்திய கூடைப்பந்தாட்ட போட்டி.
தேனி எல்.எஸ்., மில்ஸ் கூடைப்பந்தாட்டக் கழகம் நடத்திய மூன்றாம் ஆண்டு மாநில அளவிலான கல்லுாரிகளுக்கு இடையிலான ஆண்கள், பெண்கள் பங்கேற்கும் கூடைப்பந்தாட்ட போட்டியில் ஆண்கள் பிரிவில் ஜேப்பியார் கல்லூரி அணியும் பெண்கள் பிரிவில் எஸ்ஆர்எம் கல்லூரி எனறும் வெற்றிக் கோப்பையை தட்டிச் சென்றனர்.
தேனி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் எல்எஸ் மில் கூடைப்பந்தாட்ட கழகம் நடத்திய கூடைப்பந்தாட்ட போட்டி ஏப்ரல் 13 முதல் 16 வரை பகலிரவு போட்டியாக நடைபெற்றது.
இப் போட்டிகளில் சென்னை, கோவை, திருச்சி, திண்டுக்கல், மதுரையில் உள்ள 20 கல்லுாரிகள் பங்கேற்கின்றன.இதில் ஆண்கள் பிரிவில் 12 கல்லுாரி அணிகளும், பெண்கள் பிரிவில் 8 கல்லுாரி அணிகளும் போட்டிகளில் பங்கேற்றனர் மகளிர்க்கான SRM கல்லூரியும் MOP விஷாகா கல்லூரியும் இறுதிப்போட்டியில் மோதினர் இதில் SRM 61 புள்ளிகளும் MOP 45 புள்ளிகளும் எடுத்து 16 புள்ளிகள் அதிகம் பெற்று SRM கல்லூரி முதல் கோப்பையை வென்றது .
அதனைத் தொடர்ந்து ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் JIT சென்னை கல்லூரியும் சத்தியபாமா கல்லூரியும் மோதினர் இதில் JIT கல்லூரி 71 புள்ளிகளும் சத்தியபாமா 61 புள்ளிகள் பெற்று JIT கல்லூரி 10 புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற அணியினருக்கு தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே தேனி நகராட்சி நகர்மன்றத் தலைவர் ரேணு பிரியா ஆகியோர் பரிசுகளை வழங்கி கவுரவித்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.