மாவட்ட செய்திகள்
கஞ்சா ஒழிப்பு சிறப்பு போலீசார் என மிரட்டி வடமாநில வாலிபரிடம் பணம் பறித்த 2 போலி போலீசார் கைது.
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பதுபோல தொடர்ந்து போலீஸ் வேடமிட்டு வலம் வந்த இரண்டு சகாக்கள் கைது.
பிகார் மாநிலத்தை சேர்ந்தவர் லுட்புர் ரகுமான்,22. இவர், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் அருகே ஒரகடம் அருகே வைப்பூர் கிராமத்தில் தங்கி அதே பகுதியில் உள்ள வாகனங்களுக்கு சர்கரம் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், நேற்று காலை பணி முடித்து வைப்பூரில் உள்ள தான் தங்கி இருக்கும் அறைக்கு லுட்புர் ரகுமான் நடந்து சென்றார். அப்போதுத்து அங்கு புல்லெட் மோட்டார் சைக்கிளில் காக்கி பேட் அணிந்து வந்த மர்ம நபர்கள் இருபர் லுட்புர் ரகுமானை மடக்கி சோதனை செய்தனர். அப்போது நீ எங்களுக்கு பணம் கொடுக்காவிட்டால் கஞ்சா கேஸ் பதிவு செய்து உள்ளே தள்ளிவிடுவதாக மிரட்டி உள்ளனர்.
இதையடுத்து லுட்புர் ரகுமான் தனது செல்போனில் இருந்து குகூல் பே மூலம் போலீசார் என கூறிய நபருக்கு ஐந்தாயிரம் ரூபாய் பணம் அனுப்பி உள்ளார். பின் தன் தங்கி இருந்த அறைக்கு சென்ற லுட்புர் ரகுமான், வைப்பூரை சேர்ந்த சிவராமன் என்பவரிடம் நடந்தது குறித்து தகவல் தெரிவித்தார்.
சந்தேகம் அடைந்த சிவராமன் கூகுல் பேவில் பணம் அளித்த நம்பரை தொடர்பு கொண்டார். எதிர் முனையில் போலீசார் என பேசிய நபர்கள் நாங்கள் கஞ்சா விற்பனையை தடுக்கும் சிறப்பு படை போலீசார் என கூறி உள்ளனர்.
அப்பாவி வடமாநில தொழிலாளர்களிடம் ஏன் பணம் பறிதீர்கள் என சிவராமன் கேட்டுள்ளார். இதையடுத்து அந்த மர்ம நபர்கள் நாங்கள் வைப்பூர் வந்து உங்களிடம் நேரில் பேசுகிறோம் என கூறியுள்ளனர்.
இதுகுறித்து சிவராமன் ஒரகடம் போலீசாருக்கு தவல் தெரிவித்தார். பணம் பறித்த மர்ம நபர் வந்த போது அங்கு வந்த ஒரகடம் போலீசார் மர்ம நபர்கள் இருவரையும் பிடித்து விசாரித்தனர்.
பிடிப்பட்டவர்கள் வைப்பூர் அருகே வஞ்சுவாஞ்சேரி பகுதியை தேர்ந்த சதிஷ்,32, சரவணன்,45, என்பது தெரிய வந்தது. இருவரையும் பிடித்து ஒரகடம் போலீசார் விசாரித்தனர். இதில், சதிஷ், சரவணன் ஆகிய இருவரும் வடமாநில தொழிலார் லுட்புர் ரகுமானை நாங்கள் போலீசார் என ஏமாற்றி கூகுல் பே மூலம் ஐந்தாயிரம் ரூபாயை பறிமுதல் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து ஒரகடம் போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இவர்கள் இருவரும் தொடர்ந்து இதே போல போலீஸ் என கூறி பல மோசடிகளை செய்து வந்துள்ளனர் என கூறப்படுகிறது. இவர்கள் வாகனத்தில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.