மாவட்ட செய்திகள்
திருச்சி விமான நிலையத்தில் ஒரு கோடி தங்கம் பறிமுதல்.
திருச்சி விமான நிலையத்தில் ஒரு கோடி தங்கம் பறிமுதல் – கடத்தலில் ஈடுபட்ட சென்னை விமான ஊழியர் உட்பட 2 பேர் கைது.
திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு துபாய், சிங்கப்பூர், உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து விமானங்கள் வந்து செல்கின்றன.
நேற்று இரவு சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்க பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது பேஸ்ட் வடிவில் சுமார் ஒரு கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த நபரை அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவர் சென்னை விமான நிலைய ஊழியர் வினோத்குமார் என்பது தெரியவந்தது.
அதிகாரிகள் அவரை கைது செய்து அவரிடம் கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவருடன் கடத்தலில் ஈடுபட்ட மற்றொரு நபரையும் அதிகாரிகள் கைது செய்தனர். விமான நிலைய ஊழியரே தங்க கடத்தலில் ஈடுபட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.