BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

உடுமலையில் தமிழ்நாடு களரிப்பயட்டு அசோசியேசன் சார்பில் மாநிலம் தழுவிய 5 ம் ஆண்டு களரி போட்டி.

உடுமலையில் தமிழ்நாடு களரிப்பயட்டு அசோசியேசன் சார்பில் மாநிலம் தழுவிய 5 ம் ஆண்டு களரி போட்டி நடந்தது.
உடுமலையில் தமிழ்நாடு களரிப்பயட்டு சார்பில் மாநிலம் தழுவிய 5ம் ஆண்டு களரி போட்டி உடுமலை தேஜஸ் மஹாலில் நடந்து
நிகழ்ச்சிக்கு இந்திய களரிப்பயட்டு அசோசியேசன் பொதுச்செயலாளர் பூந்துறை சோமன் தலைமை வகித்தார். தமிழ்நாடு களரிப்பயிற்று அசோசியேஷன் செயலாளர் சு. வீரமணி வரவேற்றார். அக்ஷரா வித்யா மந்திர் தொடக்கப்பள்ளி சேர்மன் முருகேசன் குத்துவிளக்கேற்றனார் சிறப்பு விருந்தினர்களாக உடுமலை வட்டாட்சியர் கு. கணேசன் தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழக மேலாளர் மணிகண்டன் கம்ப்யூட்டர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். கவுரவ விருந்தினராக மைவாடி பிரிவு விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப் பள்ளித் தாளாளர் மூர்த்தி கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை பாராட்டிகளரி பயிற்சியின் அவசியம் பாரம்பரிய கலைகளான களரி சிலம்பம் பயிற்சிகளை கற்றுக்கொள்ள வேண்டும் அரசால் இந்த விளையாட்டுகளுக்கு 3% இட ஒதுக்கீடு வழங்கி உள்ளது தவிர கல்வி உதவித் தொகையும் வழங்குகின்றனர் என பேசினார்.

 


பிற்பகல் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பகத்சிங் சிலம்பம் களரி மாரஷியல்ஆர்டஸ் அறக்கட்டளை ஹரிபிரசாத் வரவேற்றார். உடுமலை உதவி வன பாதுகாப்பு அலுவலர் கணேஷ் ராம் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஜி வி ஜி பேப்பர் மில் சங்கர் மகாதேவன் அரிமா யோகானந்தம் கிளைநூலகம்எண் உடுமலை கிளைநூலகம் 2 நூலகர் கணேசன் திருப்பூர் மாவட்ட சிலம்பம் வடிவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் ஜூனியர் சப் ஜூனியர் சீனியர் தேர்வுக்கான போட்டிகள் நடத்தப்பட்டது சுவடுகள் மெய் பயட்டு உரிமி வீசல் வாள் வீசல் மற்றும் சவட்டு பொங்கல் ஆகிய போட்டிகள் நடந்தது. காலையில் கலைக்கான ஆசான்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. போட்டியின் நடுவர்களாக கன்னியாகுமரி நாகர்கோவில் திருநெல்வேலி பாலக்காடு மசுன்னக்காடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆசான்கள் நடுவர்களாக செயல்பட்டனர். தொடர்ந்து நடுவர்களாக செயல்பட்ட ஆசான்களுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சிகளை ராதா வீரமணி தொகுத்து வழங்கினார்.


மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவியருக்கு தேசிய அளவில் நடைபெறும் இறுதிப் போட்டியில் பங்கு பெற தகுதி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கானபோட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )