BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருச்சி அருகே
குடும்ப பிரச்சனையை தீர்த்து வைப்பதாக கூறி 30 பவுன் நகை, 4.5 லட்சம் பணம் மோசடி – போலி அரசு வழக்கறிஞர் கைது.

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள ஆனந்த்நகரில் குடும்ப பிரச்சனையை தீர்த்து வைப்பதாக கூறி 30 பவுன் நகை, 4.5 லட்சம் பணம் மோசடி செய்த போலி வக்கீலை போலீசார் கைது செய்தனர்.

பிச்சாண்டார்கோவில் ஊராட்சி நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள ஆனந்த்நகரை சேர்ந்தவர் 65 வயதான தனலட்சுமி. இவரது மகன் 40 வயதான கனகராஜிக்கும் பரமக்குடியை சேர்ந்த 37 வயதான கவிமலர் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கவிமலர் கணவனை பிரிந்து பரமக்குடியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கவிமலர் தனது கணவர் வீட்டிற்கு வந்து திருமணத்தின்போது வரதட்சணையாக கொடுக்கப்பட்ட நகைகளை தரும்படி மாமியார் தனலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் இதுகுறித்து கவிமலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதனால் தனலட்சுமி மன வருத்தத்தில் இருந்துள்ளார்.இதையடுத்து தனலட்சுமி வக்கீலை நாடிய போது பக்கத்து பிளாட்டில் குடியிருக்கும் பீர்பால் மகன் 37 வயதான முகமது இஸ்மாயில் என்பவர் நான் குளித்தலை நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணியாற்றி வருகிறேன். உங்கள் மருமகள் தொடுத்த வழக்கை எளிதில் முடிக்க அவரிடம் கொடுக்க வேண்டிய நகை பணத்தை என்னிடம் கொடுங்கள். இதனை சுமூகமாக முடித்து வைத்து வழக்கை திரும்பப் பெற ஏற்பாடு செய்கிறேன் என ஆறுதல் கூறியுள்ளார். இதனை நம்பிய தனலட்சுமி முகம்மது இஸ்மாயிலிடம் 30 பவுன் நகை 4 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளார். இருப்பினும் இஸ்மாயில் குடும்ப பிரச்சினையை தீர்த்து வைக்கவில்லை. இதுகுறித்து தனலட்சுமி முகம்மது இஸ்மாலிடம் கேட்டபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் சொல்லியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த தனலட்சுமி இதுகுறித்து கொள்ளிடம் காவல் நிலையத்தில் தனலட்சுமி புகார் அளித்தார்.புகாரின் பேரில் கொள்ளிடம் காவல் உதவி ஆய்வாளர் இளங்கோவன் மற்றும் போலீசார் முகம்மதுஇஸ்மாயில் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.பின்னர் கைது செய்து ஸ்ரீரங்கம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி துறையூர் கிளைச்சிறையில் அடைத்தனர்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )