BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

செங்கம் அருகே சூறாவளி காற்றில் சிக்கி சுமார் 500 ஏக்கர் வாழை மரங்கள் சேதம்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்துள்ள குப்பநத்தம் கொட்டாவூர் பரமனந்தல் கீழையூர் ஊர் கவுண்டனூர் ஆகிய பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் பரவலாக வாழை சுமார் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயிரிட்டு வருகின்றனர்.

பயிரிட்ட வாழை மரங்கள் அறுவடைக்காக காத்திருந்த நிலைகளும் மற்றும் ஒரு சில மாதங்களில் அறுவடைக்கு வரும் நிலையில் இருந்த வாழைமரங்கள் நேற்று வீசிய திடீர் சூறாவளி காற்றால் சிக்கி அப்பகுதியில் பயிரிட்டு இருந்த வாழை மரங்கள் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள 15 வகையான வாழை மரங்கள் செவ்வாழை கற்பூர வாழை ரஸ்தாளி பச்சை வாழை மொந்த வாழை செவ்வாழை உட்பட பல்வேறு வகையான வாழைகளை
விலைய வைக்கப்பட்டிருந்த வாழை மரங்கள் வேரோடு சாய்ந்ததால் விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர்.

தங்கள் விளைநிலங்களில் வைக்கப்பட்டிருக்கும் வாழைமரங்கள் ஓராண்டு முதல் ஒன்றரை ஆண்டு வரையில் பாதுகாக்கப்பட்டு பின்னர் அறுவடைக்காக வரும் நாளை எண்ணி காத்திருந்த இப்பகுதி விவசாயிகளுக்கு நேற்று இரவு வீசிய சூறாவளி காற்றால் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து பூ பிஞ்சு காய் என விற்க தகுதியற்ற நிலையில் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்தது வாழைத்தார்கள் உரிய பருவம் இல்லாததால் விற்க முடியாமல் தாங்கள் வளர்க்கும் ஆடு மாடுகளுக்கு உணவாக மட்டுமே பயன் பெறும் நிலையில் உள்ளதாகவும் இதனை நம்பி பல லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி செலவழித்து தற்போது புயல் காற்றால் மரங்கள் சாய்ந்ததால் எவ்வாறு கடனை திருப்பி செலுத்த போகிறோம் என்று செய்வதறியாமல் திகைத்து நிற்க்கும் விவசாயிகளுக்கு தமிழக அரசாவது தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கி உதவிக்கரம் நீட்டுமா என எதிர்பார்க்கின்றனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )