மாவட்ட செய்திகள்
திருச்சி விமான நிலையத்தில் பயணியிடம்
66லட்சம் வௌிநாட்டு கரன்சி பறிமுதல் – அதிகாரிகள் விசாரணை.
திருச்சி விமான நிலையத்தில்
ஏர் இந்தியா விமானம் மூலம்
துபாய் செல்வதற்காக 100க்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையம் வந்தனர்.
பயணிகளின் உடைமைகளை
வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள்
சோதனை செய்து பின்னர் விமானத்திற்கு அனுமதித்தனர். அப்போது திருச்சியை சேர்ந்த முகமது யூசுப்( 48) என்பவரின்
உடமைகள் மற்றும் அவர் கையில் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்தபோது அதில்
அமெரிக்க, சிங்கப்பூர் டாலர்கள், மலேசியா ரிங்கிட் ஆகிய வௌிநாட்டை சேர்ந்த
66லட்சம் ரூபாய் மதிப்பிலான கரண்சிகளை வைத்திருந்ததை கண்டனர்.
அதைத்தொடர்ந்து அதிகாரிகள்
விசாரணை செய்த போது பணத்திற்கான உரிய ஆவணமும் இல்லாதது கரன்சிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் யாருக்காக பணத்தை கொண்டு செல்கிறார்? யார் கொடுத்து அனுப்பியது? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES திருச்சி