BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

உடுமலை கிளை நுாலகம் எண் இரண்டில் முதன்முறையாக பெரும் புரவலர் சேர்ப்பு.

பள்ளி மாணவிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் 60 பேர் நன்கொடையாளர் மூலம் நூலக உறுப்பினர்களாக சேர்ந்தனர்.
நூலகத்தில் முதன்முறையாக பெரும் புரவலர் சேர்க்கப்பட்டது.

உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள முழுநேர கிளை நூலகம் எண் இரண்டில் உறுப்பினர் மற்றும் புரவலர் சேர்க்கை நடைபெற்று வருகிறது இதன்படி நன்கொடையாளர்கள் மூலம் உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர் 60 பேர் நூலக உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு அவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நல்லாசிரியர் பட்டதாரி ஆசிரியர் சின்னராசு தலைமை வகித்தார். உதவித் தலைமையாசிரியர் ஜெயராஜ் பட்டதாரி ஆசிரியர் ராஜேந்திரன் இசை ஆசிரியர் கஜலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இதில் மாணவியர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் ப.விஜயா உறுப்பினர் அட்டைகளை வழங்கி வாசிப்பின் அவசியம் குறித்தும் மாணவிகள் புத்தகங்களை வாசிக்க நூலகத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை வழங்கி தனது தந்தை பணிநிறைவு கால்நடை மருத்துவர் டாக்டர் பி.பழனியப்பன் பெயரில் முழுநேர நூலகம் எண் 2 ல் முதன் முறையாக ரூபாய் ஐந்தாயிரம் நூலகர் கணேசனிடம் வழங்கி பெரும் புரவலராக இணைந்தார். இதற்கு முன் நூலகத்தில் 235 பேர் புரவலர்களாக மட்டுமே இணைந்துள்ளனர் நூலகத்தில் நூலக வளர்ச்சிக்காக ரூபாய் 5 ஆயிரம் செலுத்தினால் பெரும் புரவலர் பட்டயமும் ரூபாய் பத்தாயிரம் செலுத்தினால் கொடையாளர் பட்டயமும் நூலகத்துறை மூலம் வழங்கப்படுகிறது இதுவரை கிளை நூலகம் எண் இரண்டில் பெரும் புரவலர் சேர்க்கப்படவில்லை தற்போது நூலகத்தில் முதன்முறையாக தனது தந்தையின் ஆசையை நிறைவேற்றிய பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ப.விஜயா விற்கு நூலகர் கள் வீ. கணேசன் மகேந்திரன் பிரமோத் அஷ்ரப் சித்திகா மற்றும் நூலக வாசகர் வட்டத்தினர் நன்றி தெரிவித்தனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )