BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தஞ்சை அருகே மூதாட்டியை ஏமாற்றி தாலிச்செயினை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆலாந்துறை அருகே பெண்ணிடம் நகை பறிப்பு- போலீசார் விசாரணை || Woman jewelry  snatching near Alandurai

தஞ்சை நாஞ்சிக்கோட்டை ரோடு பாபா நகரை சேர்ந்தவர் முத்துச்சாமி. இவரது மனைவி பூங்கொடி (63). இவர் கடந்த 18ம் தேதி வீட்டின் அருகில் உள்ள தையல் கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 பேர் பூங்கொடியிடம் பேச்சு கொடுத்துள்ளனர்.

அந்த மர்மநபர்களின் ஒருவன் இப்படி பாதுகாப்பில்லாமல் தாலிச்செயினை போட்டு செல்லாதீர்கள் என்று கூறி ஒரு பர்சில் வைத்து தருகிறேன் என்று தெரிவித்துள்ளான். இதை நம்பி தாலிச்செயினை கழற்றி கொடுத்துள்ளார். அப்போது மற்றொரு நபர் பூங்கொடியின் கவனத்தை திசை திருப்பி உள்ளார். இதை பயன்படுத்தி பர்சில் கல்லையும், மண்ணையும் வைத்து கொடுத்து பூங்கொடியை ஏமாற்றிவிட்டு இருவரும் தப்பி விட்டனர்.

பின்னர் பர்சை திறந்து பார்த்த பூங்கொடி அதில் கல்லும், மண்ணும் இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடன் அவர் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அபிராமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )