மாவட்ட செய்திகள்
நிலக்கோட்டை ஒன்றியத்தில் அனைவருக்கும் 100 நாள் வேலை அட்டை வழங்க கட்டாயம் 300 வசூல்.
நிலக்கோட்டை ஒன்றியத்தில் அனைவருக்கும் 100 நாள் வேலை அட்டை வழங்க கட்டாயம் 300 வசூல்.
பொதுமக்கள் அதிர்ச்சி.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 23 ஊராட்சிகள் உண்டு. இந்த ஊராட்சிகளில் தற்போது கட்டாயமாக 100 நாள் வேலை செய்பவர்கள் அனைவரும் அட்டை வேண்டுமென்றால் வீட்டு வரி ரசீது கட்டப்பட வேண்டும் என்று ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவைப் பெற்று வீட்டு வரி செலுத்தி வருகிறார்கள். ஆனால் சில ஊராட்சிகளில் வீட்டு வரி மற்றும் கட்டாயமாக 100 நாள் அட்டை வேண்டுமென்றால் 300 ரூபாய் கட்டவேண்டும் என்று அந்தந்த பணித்தள பொறுப்பாளர் மூலமாக வசூல் செய்து வருகிறார்கள்.

இதுகுறித்து பணம் வசூல் செய்யும் ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் பொதுமக்களும், 100 நாள் வேலை செய்யும் பணியாளர்களும் எதற்காக ரூ.300 கேட்கிறீர்கள் என்று கேட்டால் ஊராட்சி தலைவர்களும், ஊராட்சி பணிகளை பொறுப்பாளர்களும் ஓட்டுக்கு கொடுத்த பணத்தை வசூல் செய்வதாக ஒருபுறம் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளில் 100 நாள் அட்டை வழங்குவதில் ஏற்பட்டுள்ள இந்த முறைகேட்டை தனிப்பட்ட மாவட்ட அளவிலான ஒரு அதிகாரியை நியமித்து வசூல் செய்த பணத்தை மீண்டும் திரும்ப ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். தேசிய 100 நாள் வேலைத்திட்டத்திற்கு அட்டை வழங்குவதற்கு கட்டாயமாக 300 ரூபாய் லஞ்சமாக அல்லது வேறு விதமாக வசூலிக்கும் ஊராட்சி நிர்வாகத்தின் மீது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து ஒரு சமூக அக்கறையோடு நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியருக்கு முதலமைச்சருக்கும் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

