BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

குடிபோதையில் மனைவியுடன் ஏற்பட்ட மோதலில் 2 வயது குழந்தையை சுவற்றில் அடித்து  கொலை செய்த தந்தை.

If you are honest answer my 9 questions - Anbumani Ramadoss to Suriya -  Tamil News - IndiaGlitz.com

குடிபோதையில் மனைவியுடன் ஏற்பட்ட மோதலில் 2 வயது குழந்தையை சுவற்றில் அடித்து கணவன் கொலை செய்த செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன் என்று கூறியுள்ள பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, குற்றங்கள் இல்லாத, அமைதியான தமிழகத்தை உருவாக்க மதுவிலக்கு தான் ஒரே வழி என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “தூத்துக்குடி தாளமுத்து நகரில் குடிபோதையில் மனைவியுடன் ஏற்பட்ட மோதலில் 2 வயது குழந்தையை சுவற்றில் அடித்து கணவன் கொலை செய்த செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். குடி மனிதனை கொடூரனாக்கும் என்பதற்கு இதுதான் சிறந்த உதாரணம் ஆகும்.

அனைத்துக் குற்றங்களுக்கும் பிறப்பிடமாக விளங்குவது மதுதான். கொலை, கொள்ளை உள்ளிட்ட அனைத்து குற்றங்களுக்கும் மதுதான் மூல காரணமாக இருக்கிறது. மது வணிகம் தொடரும் வரை, மனித குலத்துக்கு எதிரான இத்தகைய கொடியக் குற்றங்களைத் தடுத்து நிறுத்த முடியாது!

குற்றங்கள் இல்லாத, அமைதியான தமிழகத்தை உருவாக்க மதுவிலக்கு தான் ஒரே வழி ஆகும். அதனால் தமிழ்நாட்டில் அனைத்து மதுக்கடைகளையும் மூடி முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )