மாவட்ட செய்திகள்
தூத்துக்குடியில் குடும்பத்தகராறு காரணமாக தனது இரண்டாவது மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த இரண்டு வயது குழந்தையை தொட்டிலுடன் சுவற்றில் அடித்து கொலை.

தூத்துக்குடியில் குடும்பத்தகராறு காரணமாக தனது இரண்டாவது மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த இரண்டு வயது குழந்தையை தொட்டிலுடன் சுவற்றில் அடித்து கொலை செய்த கொடுர தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி காமராஜ் நகரில் வசித்து வருபவர் டேவிட் பினகாஸ். வெல்டிங் பட்டறையில் வேலை செய்யும் கூலித் தொழிலாளியான இவர் தனது முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.
இதேபோல தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி யிலுள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருபவா் ஸ்டெபினா. இவரும் கருத்து வேறுபாடு காரணமாக தனது முதல் கணவரை பிரிந்து இரண்டு வயது குழந்தை கேத்தரீனா உடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.
டேவிட் பினகாஸ், ஸ்டெபீனா இவர்கள் இருவரும் மேட்ரிமோனி மூலமாக பார்த்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவும் இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டுள்ளது அப்போது டேவிட் பினகாஸ் ஆத்திரத்தில் தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த தனது இரண்டாவது மனைவி ஸ்டெபீனா வின் முதல் கணவருக்கு பிறந்த 2 வயது குழந்தை கேத்தரீனாவை தொட்டிலுடன் பிடித்து சுற்றில் அடித்துள்ளார். இதில் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தாளமுத்து நகர் போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தலைமறைவான டேவிட் பினகாஸ் ஐ தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
