மாவட்ட செய்திகள்
காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அலுவலகத்தில் நவீன உபகரணங்களுடன் கூடிய கூட்ட அரங்கம்!
காஞ்சிபுரம், ஹேண்டின் இன் ஹேண்டின் இந்தியா மற்றும் ஜே.கே., டயர்ஸ் நிறுவனமும் இணைந்து, காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அலுவலகத்தில் நவீன உபகரணங்களுடன் கூடிய கூட்ட அரங்கத்தை அமைத்துள்ளது.
திரைப்பட வீழ்த்தி மற்றும் அதன் திரை ஒலிபெருக்கி சாதனங்கள், நவீன தொழில்நுட்ப கணினி ஆகியவற்றை வழங்கி உள்ளன.
இந்த கூட்ட அரங்கத்தை காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செல்வி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
ஹேண்டின் இன் ஹேண்டின் நிறுவனத்தின் துணை பொது மேலாளர் ராபர்ட் முன்னிலை வகித்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அலுவலர் நடராஜன், ஸ்ரீபெரும்புதூர் மாவட்ட கல்வி அலுவலர் பிரேமலதா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
ஜே.கே., டயர்ஸ் நிறுவனத்தின் மேலாளர்கள் வினயகிருஷ்ணன், ராஜேந்திரன், டேவிட், ஆனந்த் சோமானி, சி.எஸ்.ஆர்., ஒருங்கிணைப்பாளர் சகாயராஜ் ஆகியோரின் ஆலோசனைப்படி, ஜே.கே., டயர்சின் நேரடி நிதியுதவியுடன் ஹேண்டின் இன் ஹேண்டின் இந்தியா தொண்டு நிறுவனம் இத்திட்டதை செயல்படுத்தியது.
காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் நன்றி உரையாற்றினார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.