மாவட்ட செய்திகள்
ஸ்ரீபெரும்புதூர் அருகே நேற்றிரவு கண்டெடுக்கப்பட்ட இளம் பெண்ணின் சடலம்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே நேற்றிரவு கண்டெடுக்கப்பட்ட இளம் பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டது. இறந்த பெண்ணின் காதலனையும், விபச்சார பெண் ஏஜென்டையும் பிடித்து போலீசார் தீவிர விசாரணை.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லம் வடகால் பகுதியில் நேற்று இரவு இருபத்தி மூன்று வயதுடைய இளம் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
அந்த இளம்பெண்ணின் உடல் அருகே கைப்பற்றப்பட்ட மணி பர்ஸ்ஸில் கிடைத்த தடயங்களை வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்தனர்.
விசாரணையில் மர்மமான முறையில் இறந்து போன பிரியா என்ற இளம்பெண் காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் என்பதும் பாலியல் தொழில் செய்து வந்தார் என்பதும் தெரியவந்தது.
வல்லம் வடகால் பகுதியில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதால் நேற்று இரவு பிரியாவும் , காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த அந்தப்பெண்ணின் காதலன் வெங்கடேசன் (வயது 25) என்பவரும் சேர்ந்து கஞ்சா புகைத்துள்ளார்கள்.
பின்னர், அந்தப் பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்ததைப் பார்த்த அப்பகுதி வழியே சென்ற மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் சடலத்தை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காதலன் வெங்கடேசன் நேற்றிரவு தலைமறைவானார்.
அந்தப் பெண்ணிடம் கிடைத்த தடயத்தை வைத்து விசாரணை மேற்கொண்டதில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஜோதி என்ற விபச்சார பெண் ஏஜன்டும், காதலன் வெங்கடேசனும் காவல்துறையிடம் சிக்கினர்.
ஜோதி என்ற விபச்சார ஏஜென்ட் பிரியா உள்ளிட்ட பல பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்துள்ளதாகவும், காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள அபிராமி ஓட்டல் மற்றும் கே எம் லாட்ஜ் ஆகியவற்றில் தங்கியுள்ள கஸ்டமர்களுக்கு பிரியா உள்ளிட்ட பெண்களை விபச்சாரத் தொழிலுக்கு அனுப்புவதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததுள்ளது.
பிரியா என்ற பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில் தன் கணவனைப் விட்டு பிரிந்து காதலன் வெங்கடேசனுடன் சேர்ந்து கொண்டு இவர் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் , ப்ரியா மற்றும் வெங்கடேசன் ஆகிய இருவரும் கஞ்சா போதைக்கு அடிமையானவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. கஞ்சா போதை தலைக்கேறி பிரியா இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா, என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
ஜோதி மற்றும் வெங்கடேசன் ஆகிய இருவரிடமும் ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றார்கள்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.