மாவட்ட செய்திகள்
பேஸ்புக்கில் ஆபாசப் பதிவிட்ட இளம் பெண் !! போக்சோவில் கைதுசெய்யத காவல்துறை!!
ஈரோட்டை சேர்ந்தவர் உமா ரஞ்சனி. இவருக்கும் கோவையை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் இடையே நீண்ட காலமாக நெருக்கமான தொடர்பு இருந்து வந்துள்ளது. ரமேசுக்கு ஏற்கனவே திருமணமாகி 15 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் இவர்களின் தவறான உறவு முறை குறித்து இரு வீட்டாருக்கும் தகவல் தெரிய வந்தது.
இந்த தவறான உறவுமுறையை கைவிடுமாறு இரு வீட்டு தரப்பிலும் வலியுறுத்தியதன் பேரில் உமா ரஞ்சினியும், ரமேசும் பிரிந்துள்ளனர்.இதையடுத்து ரமேஷின் குடும்பத்தினர் மீது ஆத்திரத்தில் உமா ரஞ்சினி இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் ரமேஷின் மனைவி மற்றும் 15 வயது மகள் மீது அவதூறு பரப்பும் வகையில் பேஸ்புக்கில் ஆபாசமாக பதிவுகளை மேற்கொண்டுள்ளார்.
இதை அறிந்த ரமேஷ் மற்றும் குடும்பத்தினர் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் உமா ரஞ்சினியை பிடித்து விசாரித்தனர். தான் ரமேஷை பிரிந்து செல்ல அவரின் மனைவி மற்றும் மகளே காரணமாக இருந்ததால், அவர்கள் மீது ஆத்திரம் ஏற்பட்டது. அதனால்தான் அவர்களை பற்றி பேஸ்புக்கில் ஆபாசமாக பதிவிட்டேன் என்று கூறி குற்றத்தை ஒப்புக் கொண்டார்.இதன் பேரில் உமாரஞ்சினியை போக்சோ சட்டத்தின் கீழ் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவையில் இளம் பெண் ஒருவர் ஆண் நண்பரின் மனைவி மற்றும் மகள் மீது அவதூறு பரப்பும் வகையில் சமூகவலைதளத்தில் ஆபாசமாக பதிவிட்டுள்ளார். இதனால் அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.
ஈரோட்டை சேர்ந்தவர் உமா ரஞ்சனி. இவருக்கும் கோவையை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் இடையே நீண்ட காலமாக நெருக்கமான தொடர்பு இருந்து வந்துள்ளது. ரமேசுக்கு ஏற்கனவே திருமணமாகி 15 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் இவர்களின் தவறான உறவு முறை குறித்து இரு வீட்டாருக்கும் தகவல் தெரிய வந்தது.
இந்த தவறான உறவுமுறையை கைவிடுமாறு இரு வீட்டு தரப்பிலும் வலியுறுத்தியதன் பேரில் உமா ரஞ்சினியும், ரமேசும் பிரிந்துள்ளனர்.இதையடுத்து ரமேஷின் குடும்பத்தினர் மீது ஆத்திரத்தில் உமா ரஞ்சினி இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் ரமேஷின் மனைவி மற்றும் 15 வயது மகள் மீது அவதூறு பரப்பும் வகையில் பேஸ்புக்கில் ஆபாசமாக பதிவுகளை மேற்கொண்டுள்ளார்.
இதை அறிந்த ரமேஷ் மற்றும் குடும்பத்தினர் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் உமா ரஞ்சினியை பிடித்து விசாரித்தனர். தான் ரமேஷை பிரிந்து செல்ல அவரின் மனைவி மற்றும் மகளே காரணமாக இருந்ததால், அவர்கள் மீது ஆத்திரம் ஏற்பட்டது. அதனால்தான் அவர்களை பற்றி பேஸ்புக்கில் ஆபாசமாக பதிவிட்டேன் என்று கூறி குற்றத்தை ஒப்புக் கொண்டார்.இதன் பேரில் உமாரஞ்சினியை போக்சோ சட்டத்தின் கீழ் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.