மாவட்ட செய்திகள்
கல்லூரி மாணவர்களுக்கிடையே பாரம்பரிய உணவு வகைகளின் சிறப்பை உணர்த்தும் வகையில் பாரம்பரிய உணவு திருவிழா.


மயிலாடுதுறை மாவட்டம்,தரங்கம்பாடி தாலுக்கா பொறையாறு தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில்(TBML) விலங்கியல் துறை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கிடையே பாரம்பரிய உணவு வகைகளின் சிறப்பை உணர்த்தும் வகையில் பாரம்பரிய உணவு திருவிழா நடத்தப்பட்டது.

இவ்விழாவை Dr.டி. ஜோயல்எட்வின்ராஜ் பிராத்தனை செய்து தொடக்கி வைத்தார் அதை தொடர்ந்து Dr.எ.கிறிஸ்டி பொன்னி அனைவரையும் வரவேற்று வரவேற்புரை வழங்கினார். முன்னிலை மற்றும் தலைமை பொறுப்பேற்று கல்லூரி முதல்வர் Dr. ஜீன்ஜார்ஜ் மற்றும் Dr.எ. கிறிஸ்டிபொன்னி நடத்தி வைத்தனர். விலங்கியல் துறையின் முன்னாள் மாணவரும் நிரவி T.R.பட்டினம் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினருமான M. நாகதியாகராஜன், M.Sc., அவர்கள் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

மாணவர்கள் நவதானியங்கள், பாரம்பரிய அரிசி வகைகளை பயன்படுத்தி ஏறக்குறைய 200க்கும் மேற்பட்ட உணவு வகைகளை தயாரித்து விற்பனை செய்தனர். அதோடு உணவு வகைகளின் முக்கியத்துவத்தையும் காட்சிப்படுத்தி இருந்தனர்.

விழாவை விலங்கியல் துறைத் தலைவர் பேராசிரியர்கள் ஆய்வக உதவியாளர்கள் மற்றும் மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். திரளாக பேராசிரியர்களும் மாணவர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பாரம்பரிய உணவை உண்டும் பாரம்பரிய உணவின் மகத்துவத்தையும் கேட்டரிந்தும் மகிழ்ந்தனர்.
முடிவில் Dr. G.தாமஸ்நித்தியானந்தம் பாரம்பரிய உணவு விழாவில் பங்கேற்ற அனைவர்க்கும் நன்றி கூறினார்.
செய்தியாளர் க. கார்முகிலன்
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
