மாவட்ட செய்திகள்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தேனி நகராட்சி அலுவலகம் முன்பாக இன்று மதியம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.


தேனி பெரியகுளம் செல்லும் சாலையில் உள்ள தேனி நகராட்சி அலுவலகம் முன்பாக இன்று மதியம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் அகில இந்திய மாநில அரசு ஊழியர் சங்கம் சார்பாக வட்ட கிளை துறைத்தலைவர் வெங்கட்ராமன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யக் கோரியும் பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்த கோரியும் சத்துணவு அங்கன்வாடி கிராமப்புற நூலகங்கள் வருவாய் கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் காலமுறை ஊதியம் உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
