மாவட்ட செய்திகள்
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரி இன்று மாலை பங்களாமேட்டில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
தேனி மதுரை செல்லும் சாலையில் பங்களாமேட்டில் நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பாக
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் அனைத்து ஊழியர் சங்கம் மேற்கு வட்ட கிளை தலைவர் பவுன்ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்தும் பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த கோரியும்
கொரோனாவை காரணம் காட்டி இரண்டு ஆண்டுகள் முடக்கப்பட்ட சரண்டர் விடுப்பு தடை செய்ததை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும்
3 சதவீத அகவிலைப்படியை கால தாமதம் செய்யாமல் உடனடியாக வழங்கிட கோரியும்,
டிஸ்மிஸ் காலம் 41 மாதத்தை பணிக்காலமாக அறிவிக்க வலியுறுத்தியும்.
தமிழக அரசு அறிவித்துள்ள நான்கு லட்சம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப கோரிக்கையும், 7 வது ஊதிய குழுவின் 21 மாத நிலுவை தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தியும், சத்துணவு அங்கன்வாடி உள்ளிட்ட அனைவருக்கும் காலமுறை ஊதியம் உடனடியாக வழங்கிட கோரி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மேற்கு வட்ட கிளை செயலாளர் முருகேசன் அனைத்து ஊழியர் சங்கம் மாவட்ட தலைவர் துரைராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.