மாவட்ட செய்திகள்
1700 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு! வேலூர்,ஏப்.21:அணைக்கட்டு அடுத்த அல்லேரி மலையில் 1700 லிட்டர் சாராய ஊறலை அழித்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

வேலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் பேபி தலைமையிலான போலீசார் ,வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த அல்லேரி மலைப்பகுதியில் உள்ள குணம்பட்டி கிராமத்தில் சாராய தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு மறைவான இடத்தில் மர்ம நபர்கள் 1700 லிட்டர் சாராய ஊறலும் ,500 லிட்டர் நாட்டு சாராயத்தையும் வைத்திருந்ததை வேலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர் . இதனை போலீசார் கைப்பற்றி முழுவதுமாக அழித்தனர். மேலும் சாராயம் காய்ச்சுவதற்காக பயன்படுத்தப்பட்ட மூலப் பொருட்களையும் பறிமுதல் செய்து அவற்றை பதுக்கி வைத்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
