மாவட்ட செய்திகள்
பசும்பொன் தேவர் ஆலயத்தில் மரியாதை செய்து தூய்மைப் பணிகள் பாஜக இளைஞரணி சார்பில் மேற்கொள்.ளப்பட்டது.

நமது நாட்டின் 75 வது சுதந்திர தின அமுத பெருவிழா (Azadi Ka Amrit Mahotsav) கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, பாஜக ஸ்தாபன தினத்தின் சமூக நீதி வாரங்களின் நிறைவு நாளான இன்று
பசும்பொன் தேவர் ஆலயத்தில் மரியாதை செய்து தூய்மைப் பணிகள் பாஜக இளைஞரணி சார்பில் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் முதுகுளத்தூரில் வீரர் சுந்தரலிங்கனார் திருவுருவச்சிலைக்கும், தேவர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் இளைஞரணி மாநில பொதுச் செயலாளர் ஆத்மா கார்த்திக் அவர்கள் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் கணபதி, இளைஞரணி மாவட்டத் துணைத் தலைவர் தவமுருகன், ஒன்றியப் பொதுச் செயலாளர் ராமமூர்த்தி, இளைஞரணி மாவட்ட செயலாளர் வராஹி சுதாகர், இளைஞரணி ஒன்றியத் தலைவர் சேதுராமன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
