BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

நிலக்கோட்டை அருகே சாக்கடைக்குள் தண்ணீர் பிடிக்கும் பொது மக்கள்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சிலுக்குவார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சென்னஞ் செட்டிபட்டி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன இந்நிலையில் இக்கிராமத்தில் நடுமையத்தில் கிராம மக்களுக்கு தேவையான தண்ணீர் ஊராட்சி நிர்வாகம் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த இடம் முழுவதும் சாக்கடை போல் தண்ணீர் தேங்கி கிடக்கிறது அதன் மையப்பகுதியில் குடங்களை வைத்து பொதுமக்கள் தண்ணீர் குடித்து பயன்படுத்தி வருகின்றன இதனால் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. இதனை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
படவிளக்கம்: சென்னஞ் செட்டிபட்டியில் பொதுமக்கள் சாக்கடை கழிவுநீர் மையத்தில் தண்ணீர் பிடிக்கும் அவல நிலையை படத்தில் காணலாம்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )