மாவட்ட செய்திகள்
தூத்துக்குடி எட்டயபுரம் பைபாஸ் ரோட்டில் உள்ள பிரைட் பர்னிச்சர் நிறுவனத்துக்கு சொந்தமான குடோனில் மின்கசிவு காரணமாக தீ விபத்து.

தூத்துக்குடி எட்டயபுரம் பைபாஸ் ரோட்டில் உள்ள பிரைட் பர்னிச்சர் நிறுவனத்துக்கு சொந்தமான குடோனில் மின்கசிவு காரணமாக தீ விபத்து. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

தூத்துக்குடியில் பிரைட் பர்னிச்சர் உரிமையாளர் சேஷன் என்பவருக்குச் சொந்தமான பர்னிச்சர் பொருட்கள் தயார் செய்யும் நிறுவனம் உள்ளது. இங்கு வீட்டிற்கு தேவையான கட்டில், பீரோ உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் தயார் செய்யும் பணி இன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இந்நிலையில் திடீரென அங்கு தீப்பற்றியது தொடர்ந்து உள்ளே பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்து இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் மிகப் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

தீயணைப்பு துறையினரின் முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
