மாவட்ட செய்திகள்
20 ஆண்டுகளாக சாலை – சாக்கடை வசதி இல்லா கிராமம்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா பிச்சம்பட்டி எம்.கே.டி நகரில் சுமார் 500 வீடுகள் உள்ளன. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் இருபது ஆண்டுகளாக சாலை வசதியும் சாக்கடை வசதிகள் இன்றி பொதுமக்கள் மிகுந்த சிரமத்துடன் உள்ளனர். சம்பந்தப்பட்ட ஊராட்சியில் முறையிடும் போது அலட்சியம் காட்டுகின்றனர். இன்று காலை எம்.கே.டி நகரைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் சம்மந்தப்பட்ட பிரச்சினையை விரைவில் சரிசெய்வதாக உறுதியழித்தபின்னர் போராட்டத்தை கைவிட்டனர்.
CATEGORIES தேனி